மீண்டும் சுழற்சிமுறையில் மின்வெட்டு – மின்சார சபை அறிவிப்பு

நாடுமுழுவதும் பகல்வேளை சுழற்சிமுறையில் மின்வெட்டு நடைமுறைப்படும் என இலங்கை மின்சார சபை முன் அறிவித்தல் வழ்கியுள்ளது.

நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தைவிட அதற்கான கேள்வி அதிகரித்துள்ளதால் மின்வழங்கல் முகாமைத்துவதை சீராக முன்னெடுக்க இந்த மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி முற்பகல் 9 மணி தொடக்கம் மு.ப. 11.15 மணிவரையில் அல்லது மு.ப. 11.15 மணியிலிருந்து பி.ப. 1.30 மணிவரையும் அல்லது பி.ப. 1.30 மணி தொடக்கம் பி.ப. 3.45 மணிவரையும் அல்லது பி.ப. 3.45 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை சுழற்சிமுறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று மின்சார சபையால் முன் அறிவித்தல் வழங்கப்படுள்ளது.

மீண்டும்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]