மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித்?

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த முதல் படம் ’வீரம்’ வசூலிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து மீண்டும் அஜித் சிவா இயக்கத்தில் ‘வேதாளம்’ படத்தில் நடித்தார். அந்த படமும் பாக்ஸ் ஆபீசில் மெகா ஹிட் அடித்தது.

இதையடுத்து, அஜித் தனது அடுத்த படத்தையும் சிவாவையே இயக்க வாய்ப்பு வழங்கினார். அதன்படி, தற்போது அஜித்-சிவா கூட்டணியில் மூன்றாவது படமாக ‘வேதாளம்’ உருவாகியுள்ளது. இவர்களது கூட்டணியில் உருவான முதல் இரண்டு படங்களைப் போலவே இந்த படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் சிவாவே இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே ‘வேதாளம்’ படம் வெளியான சமயத்தில் சிவாவின் மேக்கிங் ஸ்டைல் பிடித்திருப்பதாலேயே ‘விவேகம்’ படத்தை இயக்க சிவாவுக்கு அஜித் வாய்ப்பு வழங்கியதாக கூறப்பட்டது.

ஆனால், ரசிகர்கள் மத்தியில் அஜித்-சிவா கூட்டணி ரொம்பவும் போரடித்துவிட்டதாகவே கருதப்படுகிறது. அஜித் வேறொரு இயக்குனருடன் இணைந்து புதிய பாணியில் நடிக்கவே அவரது ரசிகர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் அஜித்-சிவா இணையும் அந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.