மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சிவகுமார்- இணையத்தில் வைரலாகும் செல் போனை தட்டி விட்ட வீடியோ உள்ளே

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற நடிகர் சிவகுமார், தன்னிடம் செல்பி எடுக்க வந்த நபரின் செல் போனை தட்டி விட்ட வீடியோ செல் வலைதளத்தில் வைரலாக பரவியது.

இதனால் சிவ குமார் மீது பல்வேறு விமர்சனங்களை எழுந்தது. இந்த விவகாரத்தை அடுத்து நடிகர் சூர்யாவும் விளக்கமளித்து வருத்தம் தெரிவித்தார்.

பின்னர் செல் போனை இழந்த அந்த இளைஞருக்கு சிவகுமார் சார்பில் புதிய போன் ஒன்றும் வாங்கி கொடுக்க பட்டது. இருப்பினும் சிவகுமாரை வைத்து பல மீம்களை தெறிக்கவிட்டனர்.

இந்நிலையில் மீண்டும் இது போன்ற சர்ச்சையில் சிக்கியுள்ளார் சிவ குமார். முன்னை போலவே நிகழ்ச்சி ஒன்றில் சென்றுள்ள சிவகுமாரிடம் ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முன்றபோது அந்த நபரின் செல் போனை தட்டிவிட்டுள்ளார் சிவகுமார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]