மீண்டும் கடற்கரையில் ஆரவ் – ஓவியா- வைரலாகும் புகைப்படம் உள்ளே

ஆரவ் – ஓவியா இருவரும் கடற்கரையில் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே அதிகம் பேசப்பட்டவர் ஓவியா. தனது வெளிப்படையான நடவடிக்கைகளால் புகழின் உச்சிக்கு சென்ற ஓவியாவுக்கென இளைஞர்கள் தனி ஆர்மியை உருவாக்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போதே ஆரவ்விடம் தனது காதலை தெரிவித்தார் ஓவியா. எனினும், ஆரவ் அவரது காதலை மறுக்கவே, நிகழ்ச்சியில் தற்கொலை செய்டு கொள்ளுமளவுக்கு சென்றார் ஓவியா. இதையடுத்து அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற ஆரவ் இறுதிவரை சென்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றார்.

இதைத்தொடர்ந்து அவ்வப்போது ஓவியா – ஆரவ் சந்தித்துக்கொள்ளும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வந்தன.

மேலும் தாய்லாந்தின் பாங்காக் நகரில் ஆரவ் மற்றும் ஓவியா கைகோர்த்தபடி செல்லும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. அதுமட்டுமின்றி ஆரவ்வின் பிறந்த நாள் கொண்டாட்டத்திலும் நடிகை ஓவியா கலந்து கொண்டிருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]