மீண்டும் ஐ.தே.கட்சி பக்கம் தாவிய வசந்த சேனநாயக்க??

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் காபந்து அரசின் அமைச்சருமான வசந்த சேனநாயக்க தற்போது அலரிமாளிகையில் இடம்பெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி அரசில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சராக இருந்த வசந்த சேனநாயக்க, அண்மையில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

எனினும், மகிந்த ராஜபக்ச அரசால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் சாய்ந்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

எனினும், அவரது இடத்துக்கு எவரும் நியமிக்கப்படாத நிலையில், கடந்த வாரம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வசந்த சேனநாயக்க பங்கேற்றிருந்தார்.
இதனால் அவர் மீண்டும் மகிந்த அணியின் பக்கம் சென்றுள்ளார் என்று கருதப்பட்டது.
இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் தற்போது அலரிமாளிகையில் இடம்பெறுகின்றது. அதில் அமைச்சர் வசந்த சேனநாயக்க பங்கேற்றுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]