மீண்டும் இரட்டைவேடத்தில் களமிறங்கும் அஜித் – புகைப்படம் உள்ளே!!

சமீபகாலமாக அஜித் தனது படங்களில் தனது கறுப்பு-வெள்ளை கலந்த இயற்கையான முடியுடன் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சிவா இயக்கத்தில் ‘விவேகம்’ படத்தில் வெள்ளை முடியுடன் நடித்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

அடுத்து, அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தையும் சிவா இயக்குகிறார். இதில் கறுப்பு முடியுடன் இளமையாக அஜித் நடிப்பார் என்று கூறப்பட்டது. முன்பு கறுப்பு முடியுடன் அவர் நிற்கும் படங்கள் வெளியாகின. விஸ்வாசம் படத்தில் நடிப்பதற்காகத்தான் டை அடித்து போஸ் கொடுத்தார் என்று கூறப்பட்டது.

இப்போது, ஐதராபாத்தில் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. நயன்தாராவும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். இங்கு படக்குழுவினருடன் அஜித் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இதில், அஜித் வெள்ளை முடி வெள்ளை தாடியுடன் காணப்படுகிறார். எனவே, அவருடைய ரசிகர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாதோ என்று வருத்தத்துடன் உள்ளனர்.

இந்த நிலையில், இந்த படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இளைஞராகவும் வயதான தோற்றத்திலும் வருகிறார். முதலில் வயதான தோற்றத்துக்கான படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதன் பிறகு இளமை தோற்றத்துக்கு அஜித் மாறுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் சால்ட்-அண்ட் பெப்பர் லுக்கில் அஜித் தோன்றவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]