மீண்டும் ஆயுதப் போராட்டத்தினால் எதுவும் சாதிக்க முடியாது – சித்தார்த்தன்

“தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற மிகப்பலம் பொருந்திய அமைப்பினாலேயே சாதிக்க முடியாத ஒன்றை, இன்னொரு ஆயுதப் போராட்டத்தினால் சாதிக்க முடியாது. அதற்கு எந்தச் சந்தர்ப்பமும் இல்லை.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஆயுதப் போராட்டத்தினால்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) 28வது வீர மக்கள் தினம் நிகழ்வு மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “சிலவேளை நாங்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தால், தமிழினத்தை முற்று முழுதாகவே சிங்களப் பேரினவாதிகள் அழித்துவிடலாம். ஆகவே தமிழீழம் ஒரு தீர்வாக இருக்கமுடியாது.

இந்தியாவுடைய அரசியல் சர்வதேச அணுகுமுறை, அதேபோன்ற உலகினுடைய அணுகுமுறை, தமிழீழத்தை பிரிப்பது என்றால் அவர்களுக்கு என்ன இலாபம் என்பதை கணக்கிடுவார்களே தவிர எங்களுக்காக நிச்சயமாக செய்ய மாட்டார்கள் என நாங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

எங்களுடைய தோல்விகளுக்கு அதுவும் ஒரு காரணம். இன்று பொருளாதாரம், கல்வி போன்ற துறைகளில் ஒரு பலவீனமான சமூகமாக ஆக்கப்பட்டுள்ளோம். ஆகவே நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒரு சாத்வீக போராட்டங்கள், பேச்சுவார்த்தைகளில் இருந்து தமிழ் மக்களுக்கான ஒரு நியாயமான ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்கவேண்டும்.” என்றுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]