ரயிலுடன் மோதுண்டு ஒருவர் பரிதாபச் சாவு மீசாலை யில் இன்று பிற்பகல் சம்பவம்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு பயணித்த கடுகதி ரயிலிடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் மீசாலையில் இடம்பெற்றது.

ரயில் வருவதை அவதானிக்காத அவர், மோட்டார் சைக்கிளில் கடவையைக் கடக்க முற்பட்ட போது இந்தச் சம்பவம் இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதே இடத்தைச் சேர்ந்த 38 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தார்.