மீசாலை வாகன விபத்தில் ஒருவர் காயம்- வைத்தியசாலையில் அனுமதி

ஏ9 வீதியில் மீசாலை -ஐயா கடைச் சந்திப் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 5மணியளவில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றுஅதிகாலை ஐயா கடைச் சந்தியில் வீதியின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பருடன் கொடிகாமம் பகுதியில் இருந்து வந்த பிறிதொரு டிப்பர் பின்பக்கமாக மோதியதிலேயே இவ் விபத்து சம்பவித்துள்ளது.

இதன் போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனம் தடம் புரண்டதோடு மோதிய டிப்பர் ரயில் தண்டவாளத்திற்கு குறுக்காக பாய்ந்து மீட்க முடியாதவாறு நின்றுள்ளது. இதன் போது கொடிகாமம் பகுதியில் இருந்து வந்த டிப்பரின் சாரதியான தம்மிணைக்குளம் மடு வீதி மன்னாரைச் சேர்ந்த 27 வயதான லோகநாதன் சர்மிலன் என்பவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மீசாலை வாகன விபத்தில் மீசாலை வாகன விபத்தில்

இவ்விபத்து சம்பவத்தினால் புகையிரதப் பாதையில் தடை ஏற்பட்டதனால் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் தாமதித்தே புகையிரதங்கள் பயணத்தை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது . மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]