மிஹின் லங்கா பணிப்பாளர் சபை நியமனம் சட்டவிரோமானது?

அரசாங்கத்தின் எழுத்துமூல அனுமதி இல்லாமல் மிஹின் லங்கா விமான சேவைக்கு முதலாவது பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவை, மிஹின்லங்கா மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகளின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.

குறித்த ஆணைக்குழு இன்று நான்காவது முறையாகவும் கூடியது. இதன்போது, மிஹின் லங்காவின் முதலாவது பணிப்பாளர் சபை நியமனத்திற்கு அப்போதைய அரசாங்கத்தின் எந்தவொரு அனுமதியும் அல்லது அதிகார மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]