மிஸ் இந்தியா பட்டம் வென்ற சென்னை மாணவி

தமிழகத்தைச் சேர்ந்த அனுக்ருதி வாஸ் என்ற இளம் பெண் மிஸ் இந்தியா 2018 பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மிஸ் இந்தியா இறுதிப் போட்டி நடைபெற்றது. 30 போட்டியாளர்களுடன் பங்கேற்ற அனுக்ருதி வாஸ், அனைவரையும் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார். உலக அழகி மனுஷி ஷில்லர் அவருக்கு மகுடம் சூட்டினார்.

19 வயதாகும் அனுக்ருதி வாஸ், சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை பிரஞ்ச் படித்து வருகிறார். சிறந்த நடனக் கலைஞரான அவர், மாடலிங் மற்றும் சினிமா நடிப்பில் ஆர்வம் கொண்டவர். தற்போது மிஸ் இந்தியா பட்டத்தை வென்றதன் மூலம் இந்தியா சார்பில் உலக அழகிப் போட்டியிலும் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

மிஸ் இந்தியா பட்டம் மிஸ் இந்தியா பட்டம் மிஸ் இந்தியா பட்டம் மிஸ் இந்தியா பட்டம் மிஸ் இந்தியா பட்டம் மிஸ் இந்தியா பட்டம்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]