‘மிஸ்டர். இங்லேண்ட்’ மற்றும் ஹமீடியாவின் Envoy London ஆகியவை உலக ஆடை வடிவமைப்பு வரைபடத்தில் இலங்கையை இடம்பிடிக்கச் செய்கின்றன

ஹமீடியா நிறுவனத்தின் முதன்மை வர்த்தகக் குறியீடான Envoy London
வர்த்தகக் குறியீட்டு தூதுவரும், 2015இல் ‘மிஸ்டர்.இங்லேண்ட்’ ஆக முடிசூடப்பட்டவருமான கிறிஸ்தோபர் பிராமெல் அவர்கள், இலங்கையின் சர்வதேச வர்த்தகக் குறியீட்டை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்கின்றார். Casual
மற்றும் முறைசார் நவநாகரிக ஸ்டெபிள்ஸ், சம்பிரதாய ஆடைகள் மற்றும் அணிகலன்கள் உள்ளடங்கலாக தனித்தன்மையுடைய, பிரத்தியேகமாகவும், அளவுக்கேற்பவும் தைக்கப்பட்ட ஆண்கள் ஆடைத் தெரிவுகளை இங்கிலாந்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர் இந்த நடவடிக்கையை மேற்கொள்கின்றார்.

உள்நாட்டு ஆடவர் ஆடைகளை சர்வதேச நவநாகரிக அரங்கிற்கு கொண்டு செல்வதில் ஹமீடியா நிறுவனம் எப்போதுமே அர்ப்பணிப்புடன் இருக்கின்றது. அதேவேளை பிராமெல் இவ் வர்த்தகக் குறியீட்டை முன்கொண்டு சென்றிருக்கின்றமையானது, இலங்கையின் ஆடவர் ஆடையை பூகோள நவநாகரிகம்சார் வரைபடத்தில் இடம்பிடிக்கச் செய்வதற்கு வழிவகுத்திருக்கின்றது என்று ஹமீடியா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பௌசுல் ஹமீட் தெரிவித்தார்.

“ஹமீடியாவின் முதன்மையான வர்த்தகக் குறியீடானது, கவனத்தை ஈர்க்க விரும்புகின்ற மற்றும் அடிப்படை பண்பியல்புகளில் இருந்து வேறுபட்டு வித்தியாசமான முறையில் தோற்றமளிக்க விரும்புகின்ற தனிநபர்களை Envoy
தனது இலக்காகக் கொண்டுள்ளது. சிறந்த துணிகள் மற்றும் மிகவுன்னத கைவினையாக்கம் என்பவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ‘என்வோய்’ வர்த்தகக் குறியீடு, தையல்சார் சிறப்பம்சங்களின் வரைவிலக்கணங்களை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. அதுமட்டுமன்றி, உள்நாட்டு வளங்களின் துணையுடன் வெளிநாடுகளில் துணிகர வணிக முயற்சிகளை மேற்கொண்டுள்ள முதலாவது உள்நாட்டு ஆடவர் ஆடை வர்த்தகக் குறியீடாகவும் திகழ்கின்றது” என்று ஹமீட் மேலும் குறிப்பிட்டார்.

ஐக்கிய இராச்சியத்தின் கவன்ட்ரி நகரத்தில் அண்மையில் இடம்பெற்ற ‘மிஸ்டர் இங்லேண்ட்’ மாபெரும் இறுதிச் சுற்றின் அலங்கார அணிவகுப்பில் பங்கேற்ற இறுதிப் போட்டியாளர்களுக்கு Envoy England
ஆனது நவநாகரிக தோற்றமுடைய, விஷேடமாக வடிவமைக்கப்பட்ட ஆடைசார் தோற்றப்பாட்டை வழங்கியிருந்தது. இறுதிச் சுற்றுக்காக, Envoy London

தெரிவுகளில் இருந்து வழங்கப்பட்ட நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட சம்பிரதாய ஆடைகளின் வழியாக ‘மிஸ்டர் இங்லேண்ட்’ இறுதிப் போட்டியாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இவை தனிச்சிறப்பான மூன்று தோற்றப்பாடுகளையும், ஸ்டைல்களையும் கொண்டவையாக காணப்பட்டன.

அண்மையில் கிறிஸ்தோபர் பிராமெல் இலங்கைக்கு வந்திருந்த போது அவருக்கு Envoy London முதன்மை வர்த்தகக் குறியீட்டிலான பல்வகை ஆடைத்தொகுதி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. ஒரு இலங்கை வர்த்தகக் குறியீட்டினால் தைக்கப்பட்ட ஆடை தொடர்பில் தனக்கு ஆரம்பத்தில் இருந்த ஐயப்பாடுகள் பற்றி அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் தனது கவலைகள் கடைசியில் காணாமல் போய்விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“நாம் எதனை எதிர்பார்க்கின்றோம் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. எனவே, அளவுகொடுக்கும் முறைமையை பயன்படுத்தினோம். ஆரம்பத்திலேயே நாம் சற்று கவலையடைந்திருந்தோம். ஆனால் நாம் ஆடைகளைப் பெற்றுக் கொண்டபோது என்றுமில்லாத ஒரு அனுபவத்தை அந்த ஆடைகள் எமக்கு தந்தன. அந்த வடிவமைப்பை நாம் நேசிக்கின்றோம். உண்மையிலேயே அது ஒரு மிகச் சிறந்த வர்த்தகக் குறியீடாகும். ‘மிஸ்டர் இங்லேண்ட்’ நிகழ்வுக்காக அணிந்த ஒரு அற்புதமான வர்த்தகக் குறியீடாக இது அமைந்திருந்தது. இது, ‘மிஸ்டர் வேர்ல்ட்’ இற்கும் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டுமென நான் விரும்புகின்றேன்” என்று அவர் கூறினார்.

சர்வதேச அளவிலான பிரபலங்களுக்கு ஆடைஅணிவிக்கின்ற உள்நாட்டின் முதலாவது ஆடவர் ஆடை வர்த்தகக் குறியீடு என்ற சாதனையை ‘என்வோய்’ நிலைநாட்டியுள்ளது. ‘மிஸ்டர் இங்லேண்ட் 2015’ ஆக முடிசூடப்பட்ட கிறிஸ்தோபர் பிராமெல்லுக்கு முன்னர், ஆங்கில ரியலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பிரபல ஆளுமை, நவநாகரிக புகைப்படக் கலைஞர்;, நூலாசிரியர்;, பேச்சாளர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் முன்னான் மொடலான நிகெல் பார்க்கருக்கு ஆடை அணிவித்த பெருமையையும் என்வோய் கொண்டுள்ளது.

அதேவேளை Envoy London ஆனது அண்மையில் ‘Envoy Concept 2017’
என்ற கருத்திட்ட கண்காட்சி ஒன்றை கொழும்பில் நடாத்தியது. ‘iகெini8’ என்ற கருத்திட்டத்தின் கீழ் நான்காவது தடவையாக இடம்பெற்ற கண்காட்சியாக இது அமைந்ததுடன், 2017ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு முன்னறிவிப்புச் செய்யும் விதத்தில், ஆடவர் ஆடைப் பிரிவில் அனைத்து உள்நாட்டு மற்றும் பூகோள நவநாகரிக போக்குகள் மற்றும் ஸ்டைல் வகைகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டன. இவ்வாறான உற்பத்தி வகைகளை Envoy Concept மட்டுமே இலங்கையில் காட்சிப்படுத்துகின்ற அதேநேரத்தில், இந்த ஒட்டுமொத்த நிகழ்வும் சர்வதேச தரநியமங்களுக்கு அமைவாக தயாரிக்கப்பட்டிருந்தது. பௌசுல் ஹமீட்டின் எண்ணத்தில் உருவாகி உருவம் கொடுக்கப்பட்ட இந்த கருத்திட்டமானது நாட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆடவர் ஆடை நவநாகரிக கண்காட்சியாக முன்னேறியிருக்கின்றது. அத்துடன் ஆண்களுக்கான முழுமையான ஆடைத் தீர்வுகளை வழங்கும் உயர் நவநாகரிக மற்றும் வாழ்க்கைமுறைப் போக்கு நிகழ்வாக மிளிர்கின்றது.