மிஸ்க்கின் – உதயநிதி கூட்டணியில் இணையும் அதிதி ராவ்

மிஸ்க்கின் உதயநிதி கூட்டணியில் இணையும் அதிதி ராவ்

மிஸ்க்கின் தான் இயக்கம் அடுத்த படத்திற்கு உதயநிதியை கதாநாயகனாக தேர்ந்தெடுத்துவிட்டார். கதைக்களத்திற்கு ஏற்ற கதாநாயகியை தேடியவண்ணம் இருந்தார். இறுதியாக அதிதி ராவ் ஹைதரியை கதாநாயகியாக தேர்ந்தெடுத்துள்ளார்.

இந்தப் படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். செப்டம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளனர்.

அதிதி ராவ் ஹைதரி மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து அவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் செக்கச்சிவந்த வானம் படத்திலும் நடித்துள்ளார்.

இந்தக்கூட்டணிக்கு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்புக்கு கிளம்பியுள்ளது. ஏனென்றால் மிஸ்கின் படங்களில் காட்சிகள் படமாக்கும் விதம் மிகவும் சிறப்பாகவும் தெள்ளத் தெளிவாகவும் இருக்கும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]