மிளகாய்த் தூள் கலந்த நீரை வீசி 17வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த மூவர் கைது

17சிறுமியை மிளகாய்த் தூள் கலந்த நீரை வீசி பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் நாவலப்பிட்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாவலப்பிட்டி – அரங்கலை பிரதேசத்தில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்த நிலையில் இக் காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சிறுமி வெளியில் சென்று வருவதற்கு உறவினர் ஒருவரின் முச்சக்கரவண்டியை ஏற்பாடு செய்திருந்தார்.

இதையடுத்து இராணுவ வீரர்  கடந்த 19 ஆம் திகதி முச்சக்கர வண்டியில் சென்ற சிறுமி மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதி மீது மிளகாய்த்தூள் கலந்த நீரை வீசி யுவதியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இச் சம்பவத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர் உட்பட மூவரைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேவேளை அண்மையில் தம்புள்ளை நகரில் சுற்றிவளைப்புக்காக சென்றிருந்த பொலிஸ் அதிகாரிகள் மீதும் மிளகாய்த்தூள் கலந்த நீரை வீசிவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச்சென்றிருந்தனர்.

இலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் நடத்தப்பட்ட மிளகாய்த்தூள் தாக்குதலை உதாரணமாக கொண்டு பல குற்றச்செயல்கள் நடைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]