முகப்பு News மில்லியன் கணக்கான மக்களை கொல்லும் ஆயுதம் இஸ்ரேலில் உள்ளது- ஐ.நா எச்சரிக்கை

மில்லியன் கணக்கான மக்களை கொல்லும் ஆயுதம் இஸ்ரேலில் உள்ளது- ஐ.நா எச்சரிக்கை

மில்லியன் கணக்கான மக்களை கொள்ளும் ஆயுதம் இஸ்ரேலில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த ஆயுதமானது, குளோரின் வாயுவினைக் கொண்ட இரசாயன ஆயுதம் எனவும், இதன்மூலம் மில்லியன் கணக்கான மக்களை கொல்ல முடியும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ரஷ்யா, ஈரான், துருக்கி ஆகிய நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் நேற்று (வெள்ளிக்கிழமை) அழைப்பு விடுத்திருந்த நிலையிலேயே ஐ.நா. இந்த எச்சரிக்கையினை விடுத்திருந்தது.

மேலும் இஸ்ரேல் நாட்டின் இட்லிப் நகரில் உள்நாட்டு, வெளிநாட்டைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் அதிகமான பயங்கரவாதிகள் இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

எனவே மக்களோடு மக்களாக இருக்கும் பயங்கரவாதிகள் பொது மக்களை கொல்ல கூடாது என்றும், முடிந்தவரை மனிதபிமானமாக பயங்கரவாதிகள் நடந்துக்கொள்ள வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகளுக்கான இஸ்ரேல் தூதுவரான ஸ்டெஃபென் டீ மிஸ்டுரா ஊடகங்களுடன் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com