மிருசுவில் புகையிரத நிலையத்தில் கஞ்சா மீட்பு

கஞ்சா

மிருசுவில் புகையிரத நிலையத்தில் கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் மிருசுவில் புகையிரத நிலையத்தில் விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்ட கொடிகாமம் பொலிஸார் 6 கிலோகிராம் கஞ்சாவை, மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று 7:00 மணியளவில் மிருசுவில் புகையிரத நிலையத்தில் கஞ்சா மறைத்து வைத்திருப்பதாக கொடிகாமம் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் விரைந்து செயற்பட்ட கொடிகாமம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர், குறித்த பகுதியில் 6கிலோ கஞ்சாப் பொதிகளினைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் இன்று சாவகச்சேரி நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படுவர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்நடவடிக்கையில் கொடிகாமம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் கே.தினேஸ், அ.கஜந்தன் மற்றும் கொடிகாமம் பொலிஸ் நிலைய பிரதி பொலிஸ் பொறுப்பாதிகாரி பிரதீப் சுரங்க எதிரசுரியா
என்.விஜிதரன் ஆகியோர் இந் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]