மிரட்டலாக வெளியானது விஜய் சேதுபதியின் “சிந்துபாத்” டீசர் உள்ளே

இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணையும் ‘சிந்துபாத்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகிய படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதி – அருண்குமார் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளனர். காதல் கலந்த ஆக்சனுடன் உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்துள்ளார். வாசன் மூவீஸ் மற்றும் கே புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.

இந்நிலையில் தற்போது சிந்துபாத் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் `சிந்துபாத்’ விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டுதோறும் சமூக சேவை, கல்வி, கலை, இலக்கியம், விளையாட்டு ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு, நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான (2019) பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடியும் பங்கேற்றார். இதில் பத்ம பூசன் விருதை குடியரசுத்தலைவர் வழங்க மலையாள நடிகர் மோகன்லால் பெற்றுக் கொண்டார். அதேபோல், நடிகர் பிரபுதேவாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. விழாவில் அவர் தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்தபடி அவர் கலந்து கொண்டார்.மேலும், மேல்மருத்துவத்தூர் பங்காரு அடிகளார், ட்ரம்ஸ் சிவமணி, பாடகர் சங்கர் மகாதேவன், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோருக்கும், பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]