மியான்மார் அகதிகளுக்கு வடமாகாணத்தில் இடம்

மியான்மார் அகதிகளுக்கு வடமாகாணத்தில் இடம்

மியான்மார் அகதிகளுக்கு

இலங்கையில் தஞ்சம் அடைந்துள்ள மியான்மார் அகதிகளை வடமாகாணத்தில் தற்காலிகமாக தங்க வைக்க வட மாகாண சபை இணக்கம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் இன்று முன்வைத்த விசேட கவனயீர்ப்பு பிரேரணைக்கு சபை முதல்வர் இணக்கம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த அகதிகளுக்கு கொழும்பு – கல்கிசை பகுதியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விசேட கவனயீர்ப்பு பிரேரணைணை முன்வைத்து உரையாற்றிய உறுப்பினர் சிவாஜிலிங்கம் குறித்த மியான்மார் அகதிகள் 31 பேரும் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடற்பகுதி ஊடாக இலங்கைக்குள் தஞ்சம் புகுந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், அவர்கள் தற்போது பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை வடமாகாணத்தில் தங்கவைத்து, பாதுகாப்பும் வழங்கலாம்.

அதனை வடமாகாணசபை அங்கீகரிக்கும் என சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

சிவாஜிலிங்கத்தின் கவனயீர்ப்பு பிரேரணைக்கு சபையில் எதிர்ப்பு வெளியிடப்படாத நிலையில் சபை முதல்வர் அதனை ஏற்று கொள்வதாக அறிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]