மியன்மார் நாட்டின் ரோஹிங்கிய மக்களுக்கு எதிராக மியன்மார் அரசும், அந்நாட்டின் பௌத்த தீவிரவாத அமைப்புக்களும் மேற்கொள்கின்ற அரச பயங்கரவாதமும், இனச்சுத்திகரிப்புக்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின்னர் ஓட்டமாவடி காவத்தமுனை அல் முபாறக் ஜூம்ஆ பள்ளிவாயல் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மியன்மார் நாட்டின்

காவத்தமுனை இளைஞர் காங்கிரஸ் தலைவர் அல் ஹாபிழ். என்.எம்.எம்.சியாம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புக்களை தெரிவித்தனர்.

மியன்மார் நாட்டின்

காவத்தமுனை அல் முபாறக் ஜூம்ஆ பள்ளிவாயலின் வழிகாட்டலில் காவத்தமுனை மில்லத் விளையாட்டு கழகம், மதினா கடற்றொழிலாளர் கிராமிய அமைப்பு என்பன ஒன்றினைந்து இவ் கவனயீர்ப்பு பேரணியை நடாத்தினர்.

மியன்மார் நாட்டின்

காவத்தமுனை அல் முபாறக் ஜூம்ஆ பள்ளிவாயல் முன்பாக ஆரம்பமான எதிர்ப்பு பேரணி வாழைச்சேனை கடதாசி ஆலை முன்பாக முடிவடைந்து அங்கு மியன்மார் நாட்டின் தலைவி ஆங் சாங் சுயிகுயின் கொடும்பாவி எரிக்கப்பட்டதுடன், நாட்டின் ஜனாபதி, பிரதமர் மற்றும் மியன்மார் தூதரகம் ஆகியோருக்கான மகஜரினை காவத்தமுனை மில்லத் விளையாட்டு கழக தலைவரால் பள்ளிவாயல் தலைவர் எம்.காதரிடம் கையளிக்கப்பட்டது.

மியன்மார் நாட்டின் மியன்மார் நாட்டின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]