மின் தூக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நபர் பலி – கம்பஹாவில் சம்பவம்!!

மின் தூக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சற்றுமுன்னர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மின் உயர்தியில் பயணித்த 33 வயதுடையவர் பலியானதுடன் 4 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.