மின்மாற்றிக் கம்பத்தில் மோதுண்டு இளைஞன் பலி – மட்டக்களப்பில் சம்பவம்..

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முஹாஜிரீன் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் மின்மாற்றிக் கம்பத்தில் மோதுண்டு வியாழக்கிழமை 08.03.2018 உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஐயூப்கான் அம்ஸாத் அலி (வயது 25) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, புதன்கிழமை நள்ளிரவு வேளையில் இவர் மோட்டார் சைக்கிளில் தனியாக முஹாஜிரீன் கிராமத்திலிருந்து பயணித்துக் கொண்டிருக்கும்போது இவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதி மருங்கிலிருந்த மின்மாற்றிக் கம்பத்துடன் மோதியுள்ளது.

காயமடைந்த இவர் உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி வியாழக்கிழமை பகல் மரணமானார்.

இச்சம்பவம்பற்றி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]