மின்சார நெருக்கடி தொடர்பான பிரச்சினைக்கு ரவி மட்டும் காரணம் அல்ல- டளஸ் அழகப்பெரும குற்றச்சாட்டு

மின்சார நெருக்கடி தொடர்பான பிரச்சினையை அமைச்சராகி 71 நாட்களை மட்டுமே கடத்தியுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது சுமத்துவது நியாயமற்றது என முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

மின்சார நெருக்கடிக்கு ஜனாதிபதி, பிரதமர் உட்பட இந்த அரசாங்கத்திலுள்ள சகலரும் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இம்முறை நீர் மற்றும் மின்சாரம் என்பன இல்லாத நிலையில் இருளில்தான் மக்கள் கொண்டாட வேண்டியுள்ளனர்.

அரசாங்கம் இந்தப் பிரச்சினையை அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மீது மட்டும் சுமத்தப் பார்க்கின்றது. ஆனால், நாம் அதற்குத் தயார் இல்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]