மின்சார நெருக்கடிக்கு தீர்வாக செயற்கை மழை

செயற்கை மழை

மின்சார நெருக்கடிக்கு தீர்வாக நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் செயற்கை மழையை பெய்ய வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, தாய்லாந்து அரசாங்கத்தின் உதவியை பெற்றுக் கொள்ள உள்ளதாக மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தின் மின்சாரத்துறை பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

1980ஆம் ஆண்டு, இவ்வாறு செயற்கை மழையை பொழிவிப்பது சம்பந்தமாக தாய்லாந்து காப்புறுதி ஒப்பந்தம் பெற்றிருப்பதாக கூறிய அமைச்சர், நாட்டில் சீரான மழைவீழ்ச்சி தன்மை இல்லாமை காரணமாக இவ்வாறு செயற்கை மழையை பொழிவிக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]