‘மின்சார சபை’யின் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

மின்சார சபை

‘மின்சார சபை’யின் ஊழியர்கள் இன்று காலை 9 மணி முதல் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளனர்.

மின்சாரசபைத் தலைவரை மின்சாரசபைப் பணியாளர்கள், அவரது அலுவலகத்தில் தடுத்து வைத்து நேற்று போராட்டம் நடத்தி இருந்தனர்.

இதனை அடுத்து பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மின்சாரசபைத் தலைவர் மீட்டனர்.

இதன்போது ஏற்பட்ட பதட்ட சூழ்நிலையில் தாங்கள் தாக்கப்பட்டதாக மின்சார சபையின் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் காயமடைந்த ஐந்து பணியாளர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று திரும்பியுள்ளதாக, மின்சார பணியாளர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]