மின்சார கட்டண பட்டியலை பார்த்து அதிர்ச்சியில் தற்கொலை செய்துக்கொண்ட காய்கறி வியாபாரி!!

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தின் புந்த்லிநகரில் உள்ள பாரத் நகரை சேர்ந்தவர் ஜெகநாத் ஷெல்கி. இவர் அப்பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்தார்.அவரது காய்கறி கடைக்கு மின்சார கட்டணமாக ஒவ்வொரு முறையும் ஆயிரம் ரூபாய் கட்டி வந்தார்.

இந்நிலையில், இந்த மாத மின்சார கட்டணத்தை பார்த்தவர் அதிர்ச்சி அடைந்தார்.அவருக்கு 8 லட்சம் ரூபாய்க்கு மின்சார கட்டணம் வந்திருந்தது. அதைக் கண்டதில் இருந்து மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். மின்சார வாரிய அலுவலகத்துக்கும் பலமுறை நடந்துள்ளார்.

ஆனால், எந்த பலனும் இல்லை. அவர்கள் அந்த தொகையை கட்டும்படி கூறிவிட்டனர்.இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]