மின்சாரம் தாக்கி மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி

லிந்துல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோனா தோட்டத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவர், இன்று அதிகாலை 4 மணியளவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் நீர் பாய்ச்சும் இயந்திரத்தின் மின் இணைப்பை துண்டிக்காது நீர் எடுக்க சென்ற போதே இச்சம்பவம் நேர்ந்துள்ளதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

3 பிள்ளைகளின் தாயான வெங்கடாசலம் சகுந்தலா (வயது 52) என்ற  பெண்னே சம்பவத்தில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது வீட்டிற்கு மின்சார நீரை இறைக்கும் மோட்டாருக்கு அருகாமையில் மின் வடத்தை பிடித்தவாறு விழுந்து கிடந்ததாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது,  அவர் 2 மணித்தியாலத்துக்கு முன்னதாகவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் கூறியதாக அவரின் பிள்ளைகள் தெரிவித்தனர்.

குறித்த பெண் நித்திரை கொள்வதற்காக மற்றுமொரு வீட்டிற்கு வழமையாக செல்வார் என்றும், நேற்று இரவு (12) அவர் அங்கு வராத நிலையில், நேற்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம், பிரேத பரிசோதனைக்காக லிந்துல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் லிந்துல பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]