மின்சாரம் தாக்கியதில் 7 வயது சிறுவன் மற்றும் தாய் பலி

பொலன்னறுவை, புலஸ்திபுர பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் தாயும் மகனும் உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பிரதேசத்தில் உள்ள மேலதிக வகுப்பு ஒன்றுக்கு அருகில் இருக்கும் தேக்கு மரக் கம்பத்துடன் இணைக்கப்பட்டிருந்த மின் கம்பியில் 07 வயது சிறுவன் ஒருவன் மோதியதால் மின்சாரம் தாக்கியுள்ளது.

இதன்போது மகனை காப்பாற்றுவதற்கு முற்பட்ட சிறுவனின் தாய் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து தாயையும் மகனையும் புலஸ்திபுர வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது இருவருமே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் புலஸ்திபுர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.