மின்சாரம் தாக்கியதில் இந்தியர் ஒருவர் பலி – கொழும்பு துறைமுகத்தில் சம்பவம்!

கொழும்பு துறைமுகத்தில் மின்சாரம் தாக்கியதில் நேற்றிரவு இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு 8.05 அளவில் கொழும்பு துறைமுகத்தின் கப்பல் நிறுத்தப்படும் தடாகத்தில் நடந்துள்ளது.

மின்சாரம் தாக்கியதில் ஆபத்தான நிலையில் இருந்த இந்தியர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

38 வயதான அகீஷ் யாதவ் என்ற இந்தியரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். தற்பொழுது சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று மரண விசாரணைகள் நடைபெறவுள்ளன.

கரையோர பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]