மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளா வாகனம்- ஒருவர் காயம்

மட்டக்களப்பு எறாவூரில் மின்சார சபையினரின் திருத்தப்பணி வாடகை வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில்  ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் மீராகேணி, மாக்கான் மாக்கார் மகாவித்தியாலயத்தை அண்டிய பகுதியில் சனிக்கிழமை 28.07.2018 இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறித்த வாகனமும் பலத்த சேதமடைந்துள்ளதோடு மின்கம்பம் முறிந்து வீழ்ந்ததினால் வீதியருகிலிருந்த கடைகளும் வீடுகளும் சேதமடைந்துள்ளன.
இச்சம்பவம்பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மின்கம்பத்துடன் மின்கம்பத்துடன்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]