மிகவும் அரிதான மீன்- இலங்கை மீனவரின் வலையில் சிக்கிய அதிஷ்டம்: ரூ.2 கோடி பெறுமதி!

மிகவும் அரிதான மீன்- இலங்கை மீனவரின் வலையில் சிக்கிய அதிஷ்டம்: ரூ.2 கோடி பெறுமதி!

மிகவும் அரிதான மீன் வகைகளுள் ஒன்றான புளுபின் ரூனா (bluefin tuna), நீர்கொழும்பு – மங்குளி கடற்பகுதியில் மீனவர் ஒருவரினால் பிடிக்கப்பட்டுள்ளது.

230 கிலோவிற்கு மேற்பட்ட எடையை கொண்ட இந்த மீனின் சந்தைப் பெறுமதி இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகம் என்று தெரியவந்துள்ளது.

உலகில் பல வகையான ரூனா மீன்கள் பிடிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

இலங்கையில் பெரும்பாலும் எலோவின் ரூனா என அடையாளம் காணப்படுகின்ற மீன்களே பிடிக்கப்படும், எனினும், தற்போது பிடிக்கப்பட்ட மீன் புளுபின் ரூனா என்ற மிக அரிதான வகையாகும்.

இது சுவையானதாகவும் சிறந்த மீன் உணவாகவும் கருதப்படுகின்றது. இந்த மீன் கடலின் கரையோரப் பகுதியிலேயே பிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மீன் பிடிக்கப்பட்ட தகவலை அறிந்தவுடன், அதனைக் கொள்வனவு செய்வதற்கு, அப் பகுதியை நோக்கி பலர் விரைந்துள்ளனர் என, அரசாங்கத் தகவல் திணைக்களச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன்.

பொதுவாக, இலங்கை கடல் வலயத்தில் காண்பதற்கு மிக அரிதாக இருக்கும் இவ்வாறான மீன் நியூசிலாந்து அட்லான்டிக் சமுத்திரம் மற்றும் கருங்கடல் பகுதியிலேயே காணப்படுவது விசேட அம்சமாகும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]