மாவீரர் நினைவுகூர அனுமதி வழங்கப்படவில்லை – அரசின் அதிரடி அறிவிப்பு

மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் எந்தச் சந்தர்ப்பத்திலும் அரசால் அனுமதி வழங்கப்படவில்லை என்று தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாலக கலுவெவ அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் எந்தச் சந்தர்ப்பதிலும் அரசால் அனுமதி வழங்கப்படவில்லை. அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என உணரும் வகையில் மேற்கொள்ளப்படும் பரப்புரைகளில் எவ்வித உண்மையும் இல்லை என அரசு வலியுறுத்துகின்றது – என்றுள்ளது.

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்ற கையுடன் வழங்கப்பட்ட முதலாவது அரச நியமனம் தகவல் திணைக்களப் பணிப்பாளராக நாலக கலுவெவ நியமித்தமையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவீரர் நினைவுகூர

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]