மாவீரர்களை நினைவு கூர்ந்து மாவீரர் நாள்

தமிழர் தாயகமெங்கும் செவ்வாய்கிழமை (27) மாவீரர் நாள் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது. வடக்கு – கிழக்கில் பல இடங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகள் அமைதியாக நடைபெற்றன.
மட்டக்களப்பு – வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீர்களுக்கு ஈகைச் சுடர் ஏற்றி அகவணக்கத்துடன் மாவீர்நான் அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழர்களின் உரிமைக்காக – தமிழீழ இலட்சியத்துக்காக விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து போராடி வீரகாவியமான மாவீரர்களை நினைவு கூர்ந்து தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் நவம்பர் 21 முதல் 27 வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இலங்கையில் அரசியல் நெருக்கடி நிலை மோசமடைந்துள்ள நிலையிலும் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]