மாவட்ட மட்டத்தில் நல்லிணக்க குழுக்கள் : அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

மதங்களிடையேயும், இனங்களிடையேயும் மேற்கொள்ளப்படும் மோதல்கள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு மாவட்ட மட்டத்தில் நல்லிணக்க குழுக்களை அமைப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது இந்த விடயம் குறித்து கூறிய நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைபபேச்சாளருமான கயந்த கருணாதிலக,

நாட்டின் தற்போதைய கருத்திற்கொண்டு மாவட்ட செயலாளரை தலைமையில் , மதத்தலைவர்கள், பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் தெரிவு செய்யப்பட்ட வேறு பிரதிநிதிகளுடன் கூடிய மாவட்ட மட்டத்திலான நல்லிணக்க குழுக்களை அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மதங்களிடையேயும், இனங்களிடையேயும் மேற்கொள்ளப்படும் மோதல்களை தீர்த்து வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு குறித்த குழுவுக்கு அதிகாரத்தை வழங்குவதற்கும், மாவட்ட குழுக்களுக்கு மேலதிகமாக தேசிய நல்லிணக்க குழுவொன்றை நியமிப்பதற்கும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க குழுவொன்றை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் சமர்ப்பித்த ஆவணத்திற்கே மேற்படி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]