மாவட்ட இலக்கிய விழாவில் ஐவருக்கு கலைச்செம்மல் விருது வழங்கிக் கௌரவம்

மாவட்ட இலக்கிய விழாவில் ஐவருக்கு கலைச்செம்மல் விருது வழங்கிக் கௌரவம்.

கலைச்செம்மல் விருது

மட்டக்களப்பு மாவட்ட கலாசார அதிகார சபை மற்றும் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட இலக்கிய விழா மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான எம் .உதயகுமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்றது .

மாவட்ட இலக்கிய விழா நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என் .மணிவண்ணன் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இலக்கிய விழா ஆரம்ப நிகழ்வுகள் மங்கள விளக்கேற்றப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்துகளுடன் இலக்கிய விழா நிகழ்வுகள் ஆரம்பமானது.

நடைபெற்ற இலக்கிய விழாவில் மாவட்ட இலக்கிய சிறுவர் பிரிவு , கிராமிய கலாசார மத்திய நிலையம் ,இஸ்லாமிய கலை இலக்கிய கழகம் ஆகியவற்றின் கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன.

இதேவேளை இலக்கிய படைப்பாளிகள் , இலக்கிய ஆர்வாளர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் , மாவட்ட மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற மாவட்ட இலக்கிய போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த இலக்கிய விழா நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட செயலாளர் எ . நவேஸ்வரன், பிரதேச செயலாளர்கள் , கலைஞர்கள், இலக்கிய வாதிகள் , கலாசார உத்தியோகத்தர்கள், மாணவர்கள் , ஆசிரியர்கள் கலை, இலக்கிய படைப்பாளிகள் கலந்துகொண்டனர்.

கலைச்செம்மல் விருதுகலைச்செம்மல் விருதுகலைச்செம்மல் விருதுகலைச்செம்மல் விருதுகலைச்செம்மல் விருதுகலைச்செம்மல் விருதுகலைச்செம்மல் விருதுகலைச்செம்மல் விருதுகலைச்செம்மல் விருதுகலைச்செம்மல் விருதுகலைச்செம்மல் விருதுகலைச்செம்மல் விருதுகலைச்செம்மல் விருதுகலைச்செம்மல் விருதுமாவட்ட இலக்கிய விழாவில்கலைச்செம்மல் விருதுமாவட்ட இலக்கிய விழாவில்கலைச்செம்மல் விருதுகலைச்செம்மல் விருதுகலைச்செம்மல் விருதுமாவட்ட இலக்கிய விழாவில்கலைச்செம்மல் விருதுகலைச்செம்மல் விருதுமாவட்ட இலக்கிய விழாவில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]