மாளிகாவத்தையில் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு

கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் சற்றுமுன்னர் இனம் தெரியாத நபரினால் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவமானது மாளிகாவத்தை ஜூம்ஆ பள்ளிவாசலை அண்டிய பகுதியான அல்பா சந்தியில் இடம்பெற்றுள்ளது.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த இடத்தில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இச் சம்பவம் குறித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]