மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு- ஒருவர் படுகாயம்

மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு- ஒருவர் படுகாயம்

மாளிகாவத்தை பகுதியில் நேற்று(புதன்கிழமை) துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி சம்பவத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவரே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டு பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]