‘மாலபே’யில் இனந்தெரியாதோர் துப்பாக்கி பிரயோகம்

மாலபே, ஜோதிபால மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை துப்பாக்கி பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜோதிபால மாவத்தை, 14 ஆவது ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் மீதோ இன்று அதிகாலை 2.40 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இந்த துப்பாக்கி பிரயோகம் காரணமாக, குறித்த வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், உயிராபத்துக்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]