மாறிப்போன சடலத்தால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கிய உறவினர்கள்!

யக்கலமுல்ல பிரதேசத்தில் உயிரிழந்த நபரின் சடலத்திற்கு பதிலாக அஹங்கம பிரதேசத்தில் உயிரிழந்த நபரின் சடலத்தை யக்கலமுல்ல பிரதேசத்தில் உயிரிழந்த நபரின் வீட்டுக்கு கொண்டு சென்றதால், இறந்தவரின் உறவினர்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கியதாக தெரியவருகிறது.

அஹங்கம மெலிகொட பிரதேசத்தில் 65 வயதான நபர் உயிரிழந்துள்ளார். சடலத்தை தயார் செய்ய உறவினர்கள் வெலிகமை பிரதேசத்தில் உள்ள மலர்சாலை ஒன்றிடம் கையளித்துள்ளனர். இந்த நிலையில், மலர்சாலைக்கு மேலும் இரண்டு சடலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

சடலம் ஒன்றை பெட்டியில் வைத்து தயார் செய்து, அதனை யக்கலமுல்லவில் உள்ள வீட்டுக்கு எடுத்துச் சென்று கொடுக்குமாறு அமரர் ஊர்தியின் சாரதியிடம் மலர்சாலையினர் கூறியுள்ளனர்.

இதற்கு அமைய சாரதி பிணப் பெட்டியை யக்கலமுல்ல பிரதேசத்தில் உள்ள வீட்டுக்கு எடுத்துச் சென்று கொடுத்துள்ளார்.

உறவினர்களின் அழுகைக்கு மத்தியில் பிணப்பெட்டியை வரவேற்பு அறையில் வைத்து திறந்துள்ளனர். அப்போது சடலத்தை பார்த்த உறவிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சடலம் தமது உறவினரது சடலம் அல்ல என சாரதியிடம் கூறியுள்ளனர்.

இதன் பின்னர் சடலம் அடங்கிய பெட்டி மீண்டும் மலர்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, யக்கலமுல்லையில் இறந்தவரின் சடலம் அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

அஹங்கமயில் இறந்தவரின் சடலத்தை யக்கமுல்லைக்குக்கு எடுத்துச் சென்று, அங்கிருந்து விடிய விடிய பயணித்து, இன்று அதிகாலையில் அஹங்கம, மெலிகொட வீட்டுக்கு எடுத்துச் சென்று கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]