மார்பக புற்று நோயை தடுக்க பாகற்காய் சாப்பிடுங்கள் – பாகற்காயின் மருத்துவ பயன்கள்

பலரும் பாகற்காய் கசப்பு தன்மை உள்ள உணவு என்பதால் சாப்பிட விரும்ப மாட்டார்கள். ஆனால் அதில் அதிகளவான மருத்துவ குணம் உள்ளது. அவற்றை பற்றி பார்க்கலாம்.

பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் மார்பக புற்று நோய் வருவதைத் தடுக்க முடியும் என ஒரு ஆய்வு கூறுகிறது. உலகம் முழுவதும் மார்பக புற்றுநோய்க்கு பலியாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் பாகற்காயை தமது உணவில் சேர்த்து கொண்டால்  இவ்வியாதியில் இருந்து விடுபடலாம்.

பாகற்காய் கசக்கும் என்று தானே அதனை விலக்கி வைக்கிறார்கள் சிலர். அவர்கள் என்ன செய்ய வேண்டும் எனில் தேங்காய் உடைத்ததும் வரும் இளநீரில் சிறிது நேரம் வெட்டிய பாகற்காய் துண்டுகளை ஊற விட வேண்டும். அல்லது உப்பு போட்டு ஊறவைக்க வேண்டும். அப்போது  அதில் உள்ள கைப்பு சுவை போய்விடும்.

நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம்.

பாகற்காய் இரைப்பை பிரச்னைகளுக்கு நல்ல மருந்து. பாகற்காயை ஜூஸ் ஆக்கிக் குடிப்பது குடலில் உருவாகும் புழுக்கள், ஒட்டுண்ணிகளைக்  கொல்ல உதவும். ஒவ்வாமை, வீக்கம், கட்டிகளையும் பாகற்காய் போக்கும்.

பாகற்காயின் விதைகள் இதய நோய்களிலிருந்து நம்மைக் காக்கும். தேவையற்ற கொழுப்புகளை எரித்து, இதய தமனி அடைப்பு ஏற்படுவதில் இருந்து காப்பாற்றும். புற்றுநோய், லூக்கீமியா, ரத்தசோகை போன்றவை வராமல் தடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.

பாகற்காயின் சாற்றை தயிரில் கலந்து தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவிவிட வேண்டும். இதைத் தொடர்ந்து செய்தால், முடி பளபளப்பாக மாறும். இதன் சாற்றுடன் சீரகத்தை அரைத்து பூசிவர, பொடுகுப் பிரச்னைகள் நீங்கும்.

பாகற்காயின் சாற்றுடன் வாழைப்பழத்தை அரைத்து தலையில் தேய்த்தால், தலை அரிப்பு நீங்கும். பாகற்காய் சாற்றோடு கொஞ்சம் சர்க்கரை சேர்த்து பேஸ்ட் மாதிரி செய்து தலையில் பூசிவர, முடிகொட்டுவது குறையும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]m