மார்பக புற்றுநோய்க்கு பிறகு உடலுறவு சாத்தியமா?

உடலுறவில் பெண்களின் மார்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பெண்களுக்கு முப்பது வயதிற்கு மேல் மார்பக புற்றுநோய் வரும் அபாயம் அதிகமாக காணப்படுகிறது. மார்பக புற்றுநோயால் மார்பங்களை இழந்த பின்னர் உடலுறவில் ஈடுபடுவது பற்றிய சந்தேகங்களுக்கு விடை காண இந்த பகுதியை தொடர்ந்து படியுங்கள்.

உடலில் ஏற்படும் மாற்றங்கள் மார்ப்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தங்களது மார்பகங்களை அறுவை சிகிச்சை மூலம் இழந்த பெண்கள், அறுவை சிகிச்சைக்கு பிறகு சங்கடமாக உணர்வதாகவும், வழக்கம் போல செயல்பட முடியவில்லை எனவும் கூறுகின்றனர். யோனி பகுதியில் ஈரப்பதம் இல்லாமல் போகிறதாம். புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் சில மருந்துகளாலும் இந்த நிலை உருவாகிறது.

இளம் பெண்கள் மார்பக அறுவை சிகிச்சை செய்த பெண்களுக்கு மெனோபாஸ் முன் கூட்டியே ஏற்படலாம். யோனி வறட்சி மற்றும் லிபிடோ இழப்பு ஆகியவை ஏற்படலாம்.

யோனி பகுதி வறட்சியாக இருந்தால் உடலுறவில் ஈடுபடுவது சிரமமாக இருக்கும். எனவே யோனி பகுதியில் உண்டாகும் வறட்சியை போக்க தேங்காய் எண்ணெய் சிறந்த தீர்வாக அமையும். ஆனால் தேங்காய் எண்ணெய்யை ஒவ்வாமை கொண்டவர்கள் பயன்படுத்த முடியாது. இதற்காக தேங்காய் எண்ணெய்யுடன் கலந்தோ அல்லது தனியாகவோ பயன்படுத்தக்கூடிய மாஸ்சுரைசர்களை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஒரு பகுதி பெண்கள் மார்பக அறுவை சிகிச்சைக்கு பிறகு மன அழுத்தம் மற்றும் சோர்வுக்கு ஆளாகின்றனர். மேலும் மார்பகத்தை அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கிய பிறகு அவர்களுக்கு உடலுறவில் நாட்டம் குறைந்துவிடுகிறது. இது போன்ற மனநலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு அவர்கள் மனநல மருத்துவர்களின் மூலம் தீர்வு காணலாம்.

பெரும்பான்மையான பெண்கள் தங்களது மார்பகங்களின் இழப்பை நினைத்து அதிகம் கவலை கொள்கிறார்கள். தன்னிடம் கவர்ச்சியில்லை. தனது கணவன் தன்னை விரும்பமாட்டான் என்று தாங்களே கற்பனை செய்து கொள்கிறார்கள்.

இவர்களால் உடலுறவில் ஈடுபட முடிந்தாலும் கூட இவர்கள் தங்கள் மீது கொண்டுள்ள குறைந்த அபிப்பராயம் இவர்களை உடலுறவில் ஈடுபடவிடாமல் தடுக்கிறது. இதிலிருந்து விடுபட இவர்களது துணை உதவி செய்தால் போதும்.துணையின் மாறாத காதலும், அரவணைப்பும் இவர்களது மனதில் உண்டான காயத்தை ஆற்றும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]