மார்ச்சுக்கு பின்னர் மாகாணசபை தேர்தல்

மார்ச்சுக்கு பின்னர் மாகாணசபை தேர்தல்

2018 மார்ச் மாதத்தின் பின்னர் மாகாணசபை தேர்தலை நடத்த வாய்ப்புள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திக்க தேமுனித சில்வா உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட மனு குறித்து ஆராய்ந்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்தத் தகவலை நீதிமன்றத்திற்குச் சமர்ப்பித்துள்ளார்.

மாகாண தேர்தல் தொகுதி நிர்ணய பணிகள் நிறைவடைந்தவுடன், தேர்தலை நடத்தும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.