தனிப்பட்ட தகவல் விற்பனை – வெட்கி தலை குனிந்த மார்க்

மார்க் சக்கர்பெர்க்

பேஸ்புக் நிறுவனம் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டிரம்ப் வெற்றி பெற பேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் “ஆலோசனை” நிறுவனத்துக்கு வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, இதன் மூலம் இரு நிறுவனங்களும் பாரிய இலாபமும் அடைந்தது.

பிரித்தானியாவை சேர்ந்த சனல் 4 செய்தி நிறுவனம் உருவாக்கிய ஆவணப்படம் இந்த தகவலை வெளியிட்டதால் பெரும் பிரச்சனையை பேஸ் புக் நிறுவனம் சந்தித்து வருகிறது.

இதன் மூலம் பேஸ்புக்கை பயன்படுத்தி வரும் 50 மல்லியன் மக்களின் பேஸ்புக் பதிவுகள் அடங்கிய தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துக்கு முறை கேடான முறையில் அளித்துள்ளது. இப்பிரச்சனை பற்றி சாட்சி அளிக்குமாறு மார்க் ஜுக்கர்பெர்க்கிடம் அமெரிக்க சட்டவல்லுனர்கள் கோரியுள்ளதாகவும் தெரிய வருகிறது

4.8 லட்சம் கோடியாக இருந்த மார்க்கின் சொத்து மதிப்பு, தற்போது 4 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இந்த நிலைமை இன்னும் நீடித்தால் இழப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

மன்னிப்பு கேட்ட காணொளி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]