மார்க்கெட் இறங்கினாலும் அவங்ககூட மட்டும் நடிக்கமாட்டேன்: அடம்பிடிக்கும் நடிகை

சின்ன குஷ்பு என்று சினிமா வட்டாரத்தில் அழைக்கப்படும் அந்த நடிகைக்கு தற்போது தமிழ் சினிமாவில் மார்க்கெட் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த மூன்றெழுத்து படம் சரியாக போகவில்லை என்பதுதான் அந்த நடிகையின் மார்க்கெட் இழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இருந்தாலும், நடிகைக்கு வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்ததாம். அவர்களுடன் நடிக்க நடிகை அதிக சம்பளம் கேட்டும் தயாரிப்பாளர்கள் அதை கொடுக்கவும் முன்வந்தார்களாம்.

மார்க்கெட் இறங்கினாலும்

ஆனால்,  அப்படி கீழிறங்கி சென்றால், முன்னணி நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்து அவர்களுடன் நடிக்காமல் ஒதுங்கிவிட்டாராம் நடிகை.

தற்போது நடன நடிகருடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் அந்த நடிகைக்கு இந்த படத்தின் மூலம் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம் என மனதுக்குள் கனவுக் கோட்டை கட்டியுள்ளாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]