மாரி யமாஷிடா- இராணுவ தளபதி சந்திப்பு

நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான திணைக்கத்தின் ஆசிய- பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் மாரி யமாஷிடா இலங்கை்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

ஐ.நாவின் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான ஆதரவுப் பணியகத்திலும் பணியாற்றும் இவர், இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள், அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயவே, இங்கு வந்துள்ளார்.

இந்தப் பயணத்தின் ஒரு கட்டமாக அவர், அரசாங்க மற்றும் இராணுவ அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

நேற்று இராணுவத் தலைமையகத்துக்குச் சென்ற மாரி யமாஷிடா, இராணுவத் தளபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போது, இராணுவத்தினரான முன்னெடுக்கப்படும் சமூகப் பணிகள் தொடர்பான விபரங்களைக் கேட்டறிந்தார்.

ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்கா படையினர் பணியாற்றுவது தொடர்பாக இருக்கும் பிரச்சினைகள் மற்றும் தடைகள் குறித்தும் இதன் போது பேசப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் இராணுவத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கான பணியகத்தின் பணிப்பாளர் நாயகம், மேஜர் ஜெனரல் மேர்வின் பெரேராவும் பங்கேற்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]