உலகெங்கும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்றுகொண்டிருக்கையில், மிக வேகமானவும் வித்தியாசமாகவும் ஒரு கிறிஸ்மஸ் மரம் உருவாக்கப்பட்டுள்ளது.

Mayfair பகுதியில் உள்ள The Claridge ஹோட்டலின்  கிறிஸ்மஸ் மரங்கள்

கிறிஸ்மஸ் பண்டிகையின் ஒரு அடையாளம் எனலாம் .ஒவ்வொரு வருடமும் பிரபலமான வடிவமைப்பாளர்கள் ஒவ்வொரு கருப்பொருளில் வித்தியாசமாக கோணத்தில் இந்த கிறிஸ்மஸ் மரத்தினை உருவாக்குவார்கள.

2009ம் ஆண்டிலிருந்து இந்த வழக்கம் நடைமுறையிலுள்ளது .இந்த வருடம் இதை உருவாக்கியவர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் வடிவமைப்பாளர் ஐவ் மற்றும் வடிவமைப்பாளர் மார்க் நியுசன்.

உலகின் சிறந்த நூறு வடிவமைப்பாளர்கள் வரிசையில் ஒன்பதாவது இடத்தில் உள்ள நியுசன் மற்றும் 11வது இடத்தில் உள்ள ஐவ், இருவரும் மிக நீண்டகால நண்பரகள். தங்கள் நட்பின்   கொண்டாட்டமாக இருவரும் இணைந்து இந்த வடிவமைப்பினை மேற்கொண்டுள்ளனர்.

இதில் பணியாற்றிய பிரிட்டனை சேர்ந்த கலை இயக்குனர் கூறுகையில் ”இது மாயஜால கிறிஸ்மஸ் அனுபவம்” என்று குறிப்பிடுகிறார்

நுழை வாயிலில் நான்கு மீட்டர் நீளமான high light boxesகள் வைக்கப்பட்டுள்ளன .கறுப்பு வெள்ளை புகைப்படங்கள் வெள்ள நிற வேலைப்பாடுகளினை தாங்கிய மரத்தில் பொதிக்கப்பட்டிருக்கும் வேலைப்பாடு வருபவர்களை மெய்மறக்க செய்யகூடியது.

நிஜமான சில்வர் birch மரங்களை வைத்து செயற்கை பனியை அதில் தூவி பின்னணியில் பெரிய பச்சை மரங்களை வைத்துள்ளனர் .

ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள சிறிய மரஇருக்கைகள் எதிர்காலத்தை குறிக்ககூடியதாக வடிவமைத்ததாக கூறியுள்ளார்

பொருத்தப்பட்ட விளக்குகள் கூட மாயாஜால தன்மையை தோற்றுவிக்கும் தன்மையோடு வண்ணங்களை கட்டுப்படுத்தி வழங்குகிறது .

எங்களுடைய இயற்கையின் அழகிலிருந்து சிறிதளவே நாங்கள் பயன்படுத்தினோம்.அந்த சிறிய விடயங்களே பேரழகினை தருவிக்க கூடியது என்பதை இங்கு புரிந்துகொள்ளலாம்

மாயஜால தன்மை அனுபவத்தையும் எதிர்கால ஆசிர் வாதங்கள் அதன் மூலம் எமக்கு தருவிக்கப்படுகின்றன என்பதையும் வடிவமைப்பில் எடுத்துகாட்டியுள்ளோம் என்று கூறுகிறார்கள் வடிவமைப்பாளர்கள்