மாமியாரின் கொடுமையாலும் கணவராலுமே நான் தற்கொலை செய்துக்கொண்டேன்- காதல் திருமணம் செய்த பெண்ணின் உருக்கமான கடிதம்

தமிழகத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் தன்னுடை தற்கொலைக்கு காரணம் மாமியார் மற்றும் கணவர் தான் என்று கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜாங்கம். இவருக்கு சுபலட்சுமி என்ற மகள் உள்ளார்.

19 வயதான் இவர் தன்னுடைய இன்ஜினியரிங் படிப்பை பாதியில் நிறுத்தி வீட்டில் இருந்து வந்தார்.

இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான தர்மலிங்கம் மகன் தர்மதுரை (25) என்பவரும் காதல் மலர்ந்துள்ளது.

இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த வேளையில், பெற்றோர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தர்ம துரையும்-சுபலட்சுமியும் தங்களது பெற்றோரின் எதிர்ப்பை மீறி அருகிலிருக்கும் கோவிலில் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த 6 மாதத்திற்கு முன்பு தர்மதுரையையும், சுபலட்சுமியும் அவர்களது பெற்றோர் தங்களது குடும்பத்தில் சேர்த்து கொண்டனர்.

தர்மதுறையின் பெற்றோர் வீட்டில் வசித்து வந்த சுபலட்சுமியிடம், தர்மதுறையின் தாய் கலைசெல்வி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார்.

இதன் காரணமாக சுபலட்சுமி தன் பெற்றோரின் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார்.

இதையடுத்து கடந்த 5-ஆம் திகதி மாமனாரின் வீட்டிற்கு சென்ற தர்மதுரை மதுஅருந்திய நிலையில் சுப லட்சுமியிடம் பிரச்சனை செய்துள்ளார்.

அப்போது அருகிலிருந்தவர்கள் சமரசம் செய்து அனுப்ப, நேற்று முன் தினம் மீண்டும் சென்ற தர்மதுறை அங்கு சுப லட்சுமி, அவரது தந்தை ராஜாங்கம், தாய் வள்ளி யம்மை ஆகியோரை தகாத வார்த்தையால் திட்டி, தாக்கி விட்டு சென்றுள்ளார்.

மிகுந்த மனமுடைந்த சுபலட்சுமி நேற்று திடீரென்று வீட்டிலிருந்து பூச்சி மருந்தை அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது சுபலட்சுமி தற்கொலை செய்வதற்கு முன் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை வீட்டிலிருந்து கைப்பற்றியுள்ளனர்.

அதில், அவர் தன்னுடைய மரணத்திற்கு காரணம் என்னுடைய மரணத்திற்கு காரணம் மாமியார் கலைசெல்வி, கணவர் தர்ம துரை, அவரது தம்பி இளையராஜா ஆகியோர் தான் என்று கூறி சில உருக்கமான தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் தர்மதுரை, அவரது தாய் கலைசெல்வி ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]