மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 18வது ஆண்டு நினைவு தினம் நேற்று (05.) யாழில் அனுஸ்டிக்கப்பட்டது

யாழ்ப்பாணம்; மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 18வது ஆண்டு நினைவு தினம் நேற்று (05.) யாழில் அனுஸ்டிக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் நினைவஞ்சலி இடம்பெற்றது.
குமார் பொன்னம்பலத்தின் புதல்வரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, சட்டத்தரணியும், நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலின் முதன்மை வேட்பாளருமான விசுவலிங்கம் மணிவண்ணன் பொது ஈகைச் சுடரினை ஏற்றிஅஞ்சலி செலுத்தினார்.

அதன்பின்னர், தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

மாமனிதர் குமார் பொன்னம்பலம் கடந்த 2000 ஆம் ஆண்டு கொழும்புவில் காரில் சென்று கொண்டிருக்கும் ஆயுத தாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

குமார் பொன்னம்பலத்தின் குமார் பொன்னம்பலத்தின் குமார் பொன்னம்பலத்தின் குமார் பொன்னம்பலத்தின் குமார் பொன்னம்பலத்தின் குமார் பொன்னம்பலத்தின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]