மாத இறுதியில் பிரதமர் இந்தியா பறக்கிறார்

மாத இறுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிய முடிகிறது.

இம்மாதம் 10ஆம் திகதி ஜப்பானுக்குச் செல்லும் பிரதமர் அங்கிருந்து 14ஆம் திகதி வியட்னாம் செல்லவுள்ளார். 19ஆம் திகதி நாடு திரும்பும் பிரதமர் மாத இறுதி வாரத்தில் இந்தியாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயமொன்றையும் மேற்கொள்ளவுள்ளார்.

 பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

இந்தப் பயணத்தில் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவீக்கிரசிங்க உள்ளிட்ட உயர்மட்ட குழுவொன்றும் கலந்துகொண்டுள்ளவுள்ளனர்.

எட்கா எனப்படும் பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பான இறுதி முடிவுகளை எடுப்பதற்காக பிரதமர் டெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளதாகக் கூறப்பட்டாலும் இன்னமும் பிரதமர் அலுவலகம் உறுதியான செய்திகள் எதனையும் வெளியிடவில்லை.

இந்தப் பயணத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியாவின் உயர்மட்ட அரசியல் தலைவர்களை அவர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக எதிர்வரும் தேசிய வெசாக்கு நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அழைக்கப்படவுள்ள இந்திய பிரதமர் நரேந்திரசிங் மோடிக்கு இதன்போது உத்தியோகப்பூர்வ அழைப்பை விடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.