மாணவ தலைவர் பதக்கம் பெற்று வீடு திரும்பிய மாணவனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

பாடசாலையில் பெற்ற பதக்கத்துடன் வீட்டுக்கு சென்று மாணவன் வழியில் உயிரிழந்த சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாணவ தலைவர் பதக்கத்தை வீட்டிற்கு கொண்டு சென்ற மாணவன் மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்கு அருகில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக மாணவன் உயிரிழந்ததாக பலங்கொடை வைத்தியசாலையின் மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.

பலங்கொடை கைரேனகம பாடசாலையில் ஒன்பதாம் வகுப்பில் கல்வி கற்கும் தில்ஹார ருவன் குமார என்ற 13 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பாடசாலையில் இடம்பெற்ற மாணவ தலைவர் பதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பும் போதே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மழை இல்லாத நேரத்தில் திடீரென வானத்தில் இருந்து வந்த தீ பந்து போன்று ஏதோன்று இந்த மாணவன் உட்பட மூவரை மூடியுள்ளது. இதன்போது குறித்த மாணவன் சுயநினைவற்று காணபட்டுள்ளார். உடனடியாக அவர் வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனையில் மின்னல் தாக்கியமையினால் குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]