மாணவ குழுக்களுக்கு இடையே மோதல் – களனி பல்கலைக்கழகம் மூடல்

மாணவ குழுக்களுக்குஇரண்டு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதல் காரணமாக களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம் தவிர்த்த ஏனைய பீடங்கள் தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக பீடாதிபதி டபிள்யூ.எம் கருணாரத்ன இதனை எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
இந்த நிலையில் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் அனைவரும் இன்று மதியத்திற்குள் வெளியேறவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்திற்கும் விஞ்ஞான பீட மாணவ சங்கத்திற்கும் இடையே இடம்பெற்ற மோதல் காரணமாகவே பல்கலைக்கழகம் மூட காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் காயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]